கந்தபுராணம் நாவல் யுடூபில் தொடராக வெளிவந்துகொண்டு இருக்கின்றது ஜீனியை தொட்டு இன்றே சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள். அறிவே ஆனந்தம்

01. கந்தபுராணம்(கதை) பகுதி 1 சூரனின்தவம்:

######கந்தபுராணம்(கதை)### பகுதி  1 ### சூரனின்தவம்: ###
###pl check with writer any of your queries  RAVIKUMAR P.  9841189033, ravikumar.writerpoet@gmail.com###

காற்று அனல்வீசிக் கொதித்துக்  கொண்டிருந்தது ஆனால் அதற்கேற்றபடி அசைந்தாடுவதற்கு மரங்களோ செடிகொடிகளோ அந்த சூனியவனத்திலில்லை.  வனத்திலிருந்த மரங்களும் செடிகொடிகளும் பலகாலத்திற்கு முன்பே அங்கு வீசிக்கொண்டிருந்த  அனல் பட்டுப்பட்டு மடிந்து வெறும் மண்தரையும் பாறைகளும் மட்டுமே இப்பொழுது அந்த மலையில் எஞ்சியிருந்தது. தூரத்திலிருந்து பார்க்க அந்த மலை ஒரு எரிமலையாகி வெடிக்க சித்தம் கொண்டதுபோல அதன் முகட்டில் மூன்று சிவந்த பிழம்புகள் அசையாது நின்றுகொண்டிருந்தது.   ஆனால் அந்தப் பிளம்புகளிலிருந்து மலை வெடிப்பதற்கான அறிகுறியான புகை ஏதும் பொங்கி வெளிவருவதுபோலத் தெரியவில்லை.  

காண்பதற்கு அவை ஜோதிபோலவும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கவில்லை. மாறாக பழுக்கக் காய்ச்சிய இரும்புத்தூண்களைத் தூக்கிநிறுத்தியதுபோல ஆடாது அசையாது நின்றுகொண்டிருந்தன.  எவ்வளவு காலம் அது அப்படி இருக்கின்றது என்பதற்கு அத்தாட்சி கூற அருகில் எந்த ஜீவராசியும் உயிருடன் இல்லை.   எங்குப் பார்த்தாலும் மரங்களும் செடிக் கொடிகளும் காய்ந்து கருகிக் கரியாகி மண்ணில் வீழ்ந்துக்கிடக்க அங்கு வாழ்ந்த விலங்குகளின் அஸ்திகள் அதனூடே எங்கும் சிதறிக்கிடந்தது.  ஆனால் எவையும் தீயின் சுவாலை பட்டு சுட்டுக் கருகி இறந்ததற்கான அடையாளம் எதுவும் அங்குக் காணப்படவில்லை.  அனல் வீசியக்காற்றில் புதிதாக சிக்கி இறந்துபோன விலங்குகளின் எஞ்சிய அழுகிய மாமிசத்தின் துர்நாற்றம் கலந்து வனம் முழுவதுவும் பரவிக் கொண்டிருந்தது.  

வனத்தில் உணவுக்காகவும் நீருக்காகவும் இடம்பெயரும் விலங்குகள் இந்த நாற்றத்தையும் காற்றின் உஷ்ணத்தையும் தூரத்திலிருந்தே உணர்ந்துத் தமது வழக்கமான பாதையை மாற்றி அவ்விடத்தைச் சுற்றிக்கொண்டு செல்லத் துவங்கிப் காலங்கள் பலகழிந்துவிட்டிருந்தது.  வழித்தடங்கள் தெரியாமல் அந்த வனத்தில் வந்து சிக்கி அனலிடைப் பட்டிறந்த விலங்குகளை உண்பதற்காக ஆசைப்பட்டு புத்திகெட்டுவந்துச் சிக்கிக்கொண்ட பலமுரட்டு விலங்குகள் அங்கிருந்த அனலின் வீச்சு தங்க முடியாமல் அந்த இடத்தின் எல்லையைத் தொட்டமாத்திரத்தில் சுருண்டு விழுந்து மடிந்து அழுகிக் கொண்டிருந்தன.  

எங்குமே தீயின் சுவாலைப் பட்டு எவையும் கருகியதாகவோ  இறந்ததாகத் தெரியவில்லை ஆனால் அங்கு வீசிய அனல் சிறிது நேரத்தில் எந்த ஜீவரசியையும் மடித்துவிடுமளவுக்குக் கொடுமையானதாக இருந்தது.  மரங்களெல்லாம் தங்கள் அடையாளங்களை இழக்காமல் அப்படியே கருகிக் கட்டைகளாகிச் சிதறிக் கிடந்தன நின்ற நிலையிலேயே கருகிக் கிடந்த பலமரங்களின் கிளைகளினூடே புகுந்தக் காற்று ஊழிக் காற்றைப் போல ஊளையிட்டுக் கொண்டு வீசிக் கொண்டிருந்தது.  
பலகாலங்களுக்கு முன்பே இந்த வனமானது ஒதுக்கப்பட்ட இடமென்றும்அங்கு யாரும் செல்லக்கூடாது  என்றும் அரசாங்கத்தால் அதனருகிலிருந்த ஊர்களுக்கெல்லாம் முரசறைந்து தெரிவிக்கப்பட்டது.  வனத்தினருகிலிருந்த விவசாய நிலங்களும்கூடப் பாழாகிவிட்டதால் அருகிலிருந்த கிரமங்கள்பல குடிபெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டிருந்தன.  இன்று எஞ்சி இருக்கும் சில ஊர்களில் இந்தச் சூனியப்பாறையைப் பற்றிய விஷயம் ஒரு கர்ண பரம்பரைக் கதையாக பேசப்படும் அளவிற்குக் காலங்கள் சென்றுவிட்டிருந்தது.

வெளியூர்களுக்குச் செல்பவர்களுக்கு மாற்றுவழிகள் அமைத்துத் தரப்பட்டிருந்தது.  பாறையைச் சுற்றி பல மைல்களுக்கு வெளியே வட்டவடிவச் சுற்றுப் பாதை அமைக்கப்பட்டு நான்கு திசைகளிலிலும் அரசாங்கக் காவலர்கள் கூடாரம் அமைத்து.   விளைந்த மூங்கில்களைக் கொண்டு சுங்கவழித் தடுப்புகளைப் போல அமைத்துக் காவலுக்காக அமர்ந்திருந்தனர்.  வழிப்போக்கர்கள் சுற்றுப் பாதையில் எப்படிச் செல்லவேண்டு மென்று அறிவுறுத்தப்பட்டப் பின்னரே அவ்வழியில் அனுமதிக்கப் பட்டனர். 

அவர்களில்  யாரும் அந்தக் கருகிப்போன வனத்திற்குள் சென்றுவிடாதபடி ஆயுதம் ஏந்திய வீரர்கள் குதிரையில் வலம் வந்துகொண்டுப் பயணம் செல்பவர்களை அறிவுறுத்திச் சரியான பாதையைக் காட்டி அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.  ஒவ்வொரு வருடமும் கருகிக்கொண்டுவரும் வனத்தின் எல்லை விரிவடைந்துக் கொண்டேவர மீண்டும் மீண்டும் அந்த சுற்றுப் பாதை புதியஎல்லைக்குத்தகுந்தபடி புதிதாக உருவாக்கப் பட்டுக்கொண்டு வருகின்றது.

சுற்றுச் சாலையின் கிழக்கு வாயிலிலிருந்து சிலகாத தொலைவில் இந்த அனல் படாத வற்றாத சிற்றருவிகள் வீழ்ந்துகொண்டிருக்கும் இடத்திற்கருகில் ஒரு சிறிய அரண்மனை கட்டப்பட்டு அதனுள் ஒரு சிவாலயமும் எழுப்பப்பட்டிருந்தது.  

கற்களும் தேர்ந்த செம்மரங்களும் தேக்கும் பொன்தகடுகளும் கொண்டு  அந்த அரண்மனை எழுப்பப்பட்டு அரசபோகத்துடன் அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டிருந்தது.  மாளிகையின் மேல் முகடில் உள்ள அரைக்கோள வடிவ அலங்கார பொற்க் கூரைகளும் அதன்  மேல் பொருத்தப் பட்டிருந்த வைரங்கள் பதித்த தங்கக்கலசங்களும் சூரியன்ஒளியில் தகதகவென்று மின்னிக்கொண்டிருந்தன.   மாளிகையினருகில் இருக்கும் குன்றின் மீது பாறையைக் குடைந்து தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது.  அதில் சில அசுரர்கள் கைகளால் சுழட்றப்படுகின்ற ராட்டினம் போன்ற எந்திரங்கள் கொண்டு தண்ணீரைஉயரே ஏற்றி பாறைமேலிருந்த கல்தொட்டிகளில் தேக்கிக் கொண்டிருந்தனர்.  

தீயில் சுடப்பட்ட செம்மண் உருளைகளை ஒன்றோடு ஒன்று பொருத்தி அந்த பொருத்தங்களில் பக்குவப்படுத்தப்பட்ட களிமண் உளுந்துமாவு கடுக்காய்சாறு சுண்ணாம்பு  சேர்ந்த கலவை பூசி உலரவைத்து நீர்த் தொட்டிகளுடன் இணைக்கப்பட்டு மாளிகையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கல்த்தொட்டிகளில் நீர்வந்துநிரம்பிதொட்டிகளின் மேல்வழிந்துச் சென்றுகொண்டிருந்தது.  நீர் வழிந்தொடும் வழியெங்கும் பதிக்கப் பட்டிருந்த மல்லிகை முல்லை பாரிஜாத செடிகள் மலர்ந்து அவற்றின் மணம் மாளிகை எங்கும் பரவிக்கிடந்தது.

தம்மைச் சுற்றிக்பணியாட்கள் குவித்துச் சென்றுவிட்டிருந்த மலர்களை ஆய்ந்து மாலைகளாகத் தொடுத்துக் கொண்டிருந்த அந்த மூன்று பெண்களும் இவைகள் எதனாலும் சந்தோசம் நிரம்பியவர்களாகத் தெரியவில்லை.  பார்வைக்கு மூவருமே தேவலட்சணமும் அரசக்கெளரவமும் பொருந்தியவர்களாகத் தெரிந்தது.   ஆனால் அவர்கள் மறவுறித் தரித்து ஒரு சந்நியாசினிகள் போல மலர்க்கொய்து அதை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருக்கும் கோலத்தைப் பார்க்க அரண்மனை உள்ளே ஒரு தவச்சாலையைப் போலத்தோற்றம் கொடுத்தது. 

அக்கா தாங்கள் அங்கு என்ன நிலை என்று யாரையேனும் அனுப்பி பார்த்து வரச்செய்தீர்களாஎன விபுதை வினவ சவுரியும் உடன் இணைந்துகொண்டு ஆமாம் அக்கா நாம் நம் சுவாமிகளுக்காக இங்கு வந்துச் சில வருடங்களே கடந்துவிட்டது.  தற்போது அவர்களின் நிலை என்னவென்றுத் தெரிந்தால் மனம் அமைதிப்படும்.   உள்ளம் சுவாமியையே நினைத்துத் தவித்துக் கொண்டுள்ளது.  நமது குலக்குரு உயிருக்கு பங்கம் விளைவிக்கும்  அளவிற்கு ஒரு தவத்தை சுவாமிகளை இயற்றச் செய்திருப்பது எதனாலென்று மனம் சஞ்சலம் அடைந்துகொண்டே உள்ளது.   காலங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.   மனம் நிம்மதியில்லாமல் தவிக்கின்றது அக்கா. 

மலர் மலையை எடுத்து உதறிவிட்டு அதிலிருந்த நீரும் கட்டாத பூக்களையும் உதிரச் செய்துவிட்டு தன்சிரசை உயர்த்தி விபுதையையும் சவுரியையும்  பார்த்தாள் சூரனின் மனைவி பதுமக்கோமளை.  நீங்கள் இருவரும் கவலைக் கொள்ளாதீர்கள் என் ஒருபாதிமனம் உங்களைப் போலவே தவித்துக் கொண்டிருக்கின்றது.  அதேசமயம் மறுபாதிமனம் நமது சுவாமிகள் மூவரின் தவமும் நிச்சயமாக நன்கு நிறைவேறும் என்று அத்தாட்சி கூறுகின்றது.  நேற்றுச் சிவாலயத்தில் பூசை முடித்துவிட்டு சிறிது நேரம் நான்கண்கள்மூடிப் பிரார்த்தனைச்செய்துகொண்டிருந்தேன் அப்போது என் மனதில் அசரீரிப் போன்ற ஒரு குரல் தெளிவாக ஒலித்தது.  

“மகளே கவலைக் கொள்ளாதே உன் சுவாமியின் தவம் நிறைவேறும் உங்கள் வாழ்வு வளம் பெரும் என்று”  சிவனே எனக்கு கூறுவது போல இருந்தது.  

பின்னர் என்ன நடந்ததென்றுத் தெரியாது நீங்கள் தான் என்னை தண்ணீர் தெளித்து எழுப்பி மடியில் கிடத்திக் கொண்டிருந்தீர்கள்.   உங்கள் முகத்தில் பயம் தெரிந்தது.   என் மனத்தில் அப்பொழுது அனைத்துக் கலக்கங்களும் அகன்றுவிட்டிருந்தது.  

இறைவன் எனக்கு மட்டும் தெரிவித்திருந்தாலும் உங்களுக்கும் அது நம்பிக்கைத் தரவல்ல ஒரு செய்தியே.   அதனால் கலக்கம் கொள்வதை விட்டுவிட்டு நமது பூசையைத் தொடருவோம்.   இங்கே நாம் செய்து வரும் பூசை சுவாமிகளின் தவத்திற்குத் துணைசெய்யும்.   ஈசனின் கருணையை அவர்கள் மீதுப் பொழியவைக்கும்.  

ஆனால் இன்று அங்கு வனத்தில் நிலவும் சூழ்நிலையில் நமது சுவாமிகள் நிலைப் பற்றி ஏதும் சொல்வதற்கில்லை யாரும் அருகில் சென்று பார்த்து வர அஞ்சுகின்றார்கள்.   அப்படி அனுப்பிய யாரும் மீண்டு வரவில்லை.   சுவாமிகள் செய்கின்ற கடுந்தவம் அவர்களது உடலையும் கூடப் பொசுக்கிக் கொண்டிருகின்றது.  எந்த ஜீவராசிகளும் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக அந்த வனம் ஆகிவிட்டது என்பது நீங்களும் அறிந்ததே.   மக்களும் அந்த இடத்தை சூனியவனம் மாயவனம் என்று பெயர்கொண்டு அழைக்க ஆரம்பித்து பலகதைகளையும் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.  

 நான் நமதுக் குலத்தெய்வம் மாயாதேவியின் துணைக் கொண்டு பிரசன்னங்கள் பார்த்து சில உண்மைகளைத் தெரிந்துகொண்டேன்.  பிரசன்னத்தின்போது மாயாஅன்னை கூறினார்கள்சுவாமிகளின்  உயிருக்கு எந்த பாதகமும் நேராதுகவலைக்கொள்ளவேண்டாமென்று.   அதனால்நான் இப்பொழுதுச் சிறிது மனஅமைதிக் கொண்டிருக்கின்றேன் நீங்களும் கவலையையொழித்து நிம்மதி கொள்ளுங்கள். 

அக்கா நம்மிடம் உள்ள சம்பத்துகளுக்கும் பொன் பொருட்களுக்கும் இந்த உலகமே இணையில்லையே பின் ஏன் சுவாமிகள் சுகங்களைத் துறந்து இன்று இந்தத் தவம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது.  

விபுதை அசுரக் குலத்தில் பராக்கிரமம் நிறைந்த நம்முடைய முன்னோர்கள் பலரும் கடுமையானத் தவம் செய்தே மிகுந்த பெருமை தரக்கூடிய வரங்களை பெற்று பின்னர் மூவுலகையும் ஆட்சிசெய்து வந்திருக்கின்றார்கள்.   அவர்கள் வரிசையில் நமது சுவாமிகளும் குலப்பெருமை சேர்க்கும் விதமாகவே இன்று இந்த தவத்தை மேற்கொண்டுள்ளனர்.  

சகோதரிகளே உங்களைப் போல என் மனமும் தவித்துக் கொண்டிருந்தாலும் அரசாங்கக் காரியங்கள் தடையின்றி நடக்க நான் மனதைத் திடமாக்கி வைத்திருக்கின்றேன்.   மகேந்திரபுரியில் நமது தந்தைக்கு நிகரான நமது சுவாமிகளின் தந்தையார் கசியபர் இருந்து அனைத்து அரசாங்க அலுவல்களையும் பார்த்துக் கொள்கின்றார்.

இங்கே நமது சுவாமிகளின் தவத்திற்குப் பங்கமேதும் வந்துவிடாதவாறு நான்குபுறமும் பலம் வாய்ந்த சேனாதிபதிகளுடன் பலாயிரம் சேனைகளை நிறுத்தி எந்தவித எதிர்ப்புகளுக்கும் போருக்கும் ஆயத்தமாக அவர்களை பகலும் இரவும் கண்காணிப்புடன் இருந்துவரக் கட்டளையிட்டிருக்கின்றேன்.  மேலும் முண்டதேசத்திலிருந்து முசுண்டன் என்னும் மாயாவி அரக்கனை வரவழைக்க இங்கிருந்து தூதுவர்கள்சென்றிருகின்றார்கள்.  சிலதினங்களில் அவனிங்கு வந்துவிடுவான்.   அவன் மாயசக்திகளை பயின்றவன் அதனால் அவன் நமது சுவாமிகளின் அருகில் சென்று அவர்களது நலம் பற்றி தகவல்களை தெரிந்து வருவான் என்று நம்புகின்றேன் என்று கூறிப் பதுமக்கோமளை அனைத்து மாலைகளையும் பணிப்பெண்களிடம் ஆலயத்திற்கு எடுத்துவரச் சொல்லிவிட்டு விபுதையையும் சவுரியையும் அழைத்துக் கொண்டு அன்றைய பூசைக்கு ஆலயம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

சூனியவனத்தில் சூரன் சிங்கமுகன் தாரகன் மூவரும் செய்யும் தவத்தால் எழுந்த கனல் அந்த வனத்தைப் பொக்சுகியது மட்டுமன்றி விண்ணில் எழுந்து மேலே சூனியம் போன்ற ஒரு வெட்டவெளியை ஏற்படுத்தி விட்டிருந்தது.  மேகங்களும்கூட அந்த வெளியைக் கடக்க அஞ்சி அதைச் சுற்றிக்கொண்டுச் சென்றன.   இதையறியாதுஅந்த வெட்டவெளியை கடக்க முயற்சி செய்யும் பறவைகளெல்லாம் துணுக்குற்று க்ஷணத்தில் உயிர்துறந்து கீழே விழுந்து இறந்துகொண்டிருந்தன.  

தவத்தின் ஆற்றல் ஓங்க ஓங்க அனலின் வீச்சும் அதிகரித்து விண்ணின் பல அடுக்குகளையும் ஊடுருவிச் சென்று தேவருலகைச் சூழ்ந்துகொண்டது.  தேவருலகைச் சூழ்ந்த இந்த அனல்காற்றால் பூமியில் செய்த யாகங்களின் ஆவிர்பாகங்கள் தேவர்களைச் சென்றுச்சேர முடியாமல் பலனிழந்து போய்க்கொண்டிருந்தது.  தேவர்கள் தமக்குக் கிடைக்கவேண்டிய ஆவிர்பாகம் கிடைக்காததால்பலமிழந்து முகம்வாடி நிலைக்குலைந்து நின்றார்கள்.

இந்தச்சூழ்நிலை எதனால் நேர்ந்தது என்று தேவகுரு பிருகச்பதியுடன் இந்திரன் மந்திராலோசனையில் அமர்ந்திருந்தான்.  இந்திராதிபதி தன் குருவைப் பார்த்து.  குருவே நான் சில வாரங்களுக்கு முன் அவ்விடத்தைச் சென்று பர்வையிட்டுவந்தேன். 
காணச்சகிக்காத தோற்றத்துடன் அந்த வனமெல்லாம் கருகி வீழ்ந்துக் கிடக்கின்றது.  அசுரர்கள் மூவரும் இப்பொழுதோ அப்பொழுதோவென்று உடல் மெலிந்துச் சதையும் தோலும் எலும்போடு ஒட்டிக்கொள்ள உயிர் ஒடுங்கி வெந்த செங்கற்களைப் போலச் சமைந்துவிட்டனர்.  ஐயனே அங்கு ஒலித்துக் கொண்டிருக்கின்ற ஊழிக் காற்றினிடையே அவர்கள் உயிரிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்ற சிவநாமம் மட்டுமே அங்கு ஜீவனாகப் பரவிக் கிடக்கின்றது.

தேவலோகத்திற்கு சங்கடங்கள் வருவதைத் தவிர்க்க அந்த சூனியவனத்தின் மேல் நான் எனது வஜ்ராயுதத்தைக்கொண்டு ஒரு தடுப்பரணை எழுப்பி நமது லோகத்தை அதன் சுவாலைகள் வந்து தாக்காதவாறுச் செய்துவிட்டுவந்தேன்.  ஆனால் பலனேதுமில்லை  எழுதினங்களிலேயே நான் எழுப்பிய தடுப்பரண்   கரைந்து போயிற்று.  இன்னும் சில நாட்களே அசுரர்கள் ஜீவித்திருப்பர்கள்  என்று என் ஆழ்மனம் கூறுகின்றது.  அசுரர்கள் எழுப்பிய தவக்கனலில் அவர்களே விழுந்து மடிந்தவுடன் இந்திரலோகத்தின் இந்தத் தற்காலிக நிலைச் சீராகிவிடும் என்று மகிழ்ச்சிப்பொங்கக் கூறிவிட்டு தன் குரு பிருகச்பதியைப் பார்த்தான் இந்திரன். 

பொன்னிறப் புன்னகயொன்றை உதிர்த்த தேவகுரு.  “இந்திரதேவா அப்படி எதுவும் குறைவாக எடைபோடாதே தவத்தின் போக்கை.  நீ உனது முந்தைய தவறுகளிலிருந்து பாடங்கள் ஏதும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.   தேவலோகத்திற்கு ஏற்பட்ட சங்கடங்களைத் தவிர்க்க பலமுறை நீ மகாதேவரைத் தொழுது அவரது அருள்பெற்றபின்னரே மீண்டும் இங்கேவந்து ஆட்சிசெய்ய முடிந்தது என்பதை நீ மறந்துவிட்டாய்ப் போலும். 

எனக்கென்னவோ இந்த சூழ்நிலை இன்னும் மோசமடையும் என்றே சகுனங்கள் கூறுகின்றன.  நான் இங்கு வருவதற்கு முன்பு எனது வாகனத்தில் பழுது ஏற்பட்டு பயணம் தடைப்பட்டது.  தேவதச்சனை அழைத்து அதை சரிசெய்து இங்குவரத் தாமதமாகிவிட்டது.  தேவலோகமெல்லாம் இருள் சூழ்ந்திருப்பதுபோன்ற ஒரு காட்சி என் கண்களுக்கு வந்துச் சென்றது. வானத்தில் மழைமேகங்கள் தண்ணீருக்கு பதிலாக ரத்தத்தைப் பொழிந்துகொண்டிருப்பது போன்றக் காட்சிகள் வந்துச்சென்று என் மனத்தை சஞ்சலம் அடையச்செய்தது.

இவைகளுக்கிடையே நீ எப்பொழுதும் போல உன் சந்தோசமான நினைவுகளுடன் வலம் வந்துகொண்டிருகின்றாய்.   உன் புத்தியை தீட்டிக்கொள்.   ஏனெனில் இதுவரை மாகதேவர் தவம் செய்தவர்களுக்கு அதற்குரிய பலனைக் கொடுக்காமல்  நிராகரித்ததில்லை.   தவத்தின் பெருமை அத்தகையது.   அதனாலேயே  நம்பிக்கையோடு அசுரர்கள் சுக்கிராசாரியாரின் அறிவுரைப்படி இந்த தவத்தை மேற்கொண்டிருகின்றார்கள்.   நீ நினைப்பதுபோல மாகாதேவர் அவர்களைக் கைவிட்டுவிடுவார் என்று என்னால் சிந்திக்கவும் இயலவில்லை.

இன்று உங்களுக்கு தேவலோகத்தைச் சூழ்ந்துள்ள அனல்காற்றால் பூமியிலிருந்து உங்களுக்குக் கிடைக்கவேண்டிய அவிர்பாகங்களும் வாழ்த்தொலிகளும் உங்களை வந்து சேராமல்  தடைபட்டு நின்றுவிட்டன.   அமிர்தத்தின் துணையால் உங்களால் தொடர்ந்து உயிரைத் தக்கவைத்துக் கொண்டு வாழமுடிந்தாலும் உங்களால் பலகாலம்  சந்தோசமாக அனைத்துச் சுகங்களையும் அனுபவித்துத் திரியமுடியாது. 

நீங்கள் அனைவரும் போருக்கு தயாராக வேண்டிய நிர்பந்தம் உங்களை நெருங்கிக்கொண்டுவருகின்றதென்றே எனக்குத் தோன்றுகின்றது.   அதனால் உனது ஆயுதங்களைத் தீட்டிக்கொள் படைகளைத் தயார்செய்து பலப்படுத்திக்கொள்.  ஒருவேளை இங்கு யாரும் வாழமுடியாது என்னும் சூழ்நிலை வந்துவிட்டால்,  அருகில் இருக்கும் உலகங்களிலோ பூலோகத்திற்கோ  சென்று அவைகளில் தற்காலிகமாக மறைந்து வழ்ந்துகொள்ளுங்கள்.  இதனால்உங்கள் சுகபோகங்களுக்கு சிலகாலங்கள் குறைவு ஏற்படுமென்றாலும் உங்கள் உயிர்கள் பாதுகாக்கப்படும்.  

இந்திரனுக்கு குருவின் ஆருடம் சற்றும் பிடிக்கவில்லையென்றாலும் தனது குருவின் வார்த்தைகளை மதிப்பதுபோல பாவனைசெய்து கொண்டான்.  மற்றவர்களின் முன் தைரியம் கொண்டவன் போல வெளியில் நடித்தாலும், அவனுள் ஒரு நடுக்கம் இருந்துகொண்டிருந்தது நாம் வஜ்ராயுதத்தால் எழுப்பிய தடுப்பரண் இன்று கரைந்து போய்விட்டது.  இனி வேறு எந்த பலம்வாய்ந்த ஆயுதம் இதைச்சீர்செய்து நமக்கு நன்மைச் சேர்க்கப் போகின்றது என்று மனம் குழம்பிக்கொண்டிருந்தது.   நாராயணரின்சக்கரமும் மகாதேவரின் சூலமும் பாசுபதாச்திரமும் இருக்கும் வரை நமக்கு கவலையில்லை என்று மனம் ஓரளவிற்கு ஆசுவசமடைந்தது.

காற்று அனல்வீசிக் கொதித்துக்  கொண்டிருந்தது ஆனால் அதற்கேற்றபடி அசைந்தாடுவதற்கு மரங்களோ செடிகொடிகளோ அந்த சூனிய வனத்திலில்லை.  வனத்திலிருந்த மரங்களும் செடிகொடிகளும் பலகாலத்திற்கு முன்பே அங்கு வீசிக்கொண்டிருந்த  அனல் பட்டுப்பட்டு மடிந்து வெறும் மண்தரையும் பாறைகளும் மட்டுமே இப்பொழுது அந்த மலையில் எஞ்சியிருந்தது. தூரத்திலிருந்து பார்க்க அந்த மலை ஒரு எரிமலையாகி வெடிக்கச் சித்தம் கொண்டதுபோல அதன் முகட்டில் மூன்று சிவந்த பிழம்புகள் அசையாது நின்றுகொண்டிருந்தது.   ஆனால் அந்தப் பிழம்புகளிலிருந்து மலை வெடிப்பதற்கான அறிகுறியான புகை ஏதும் பொங்கி வெளிவருவதுபோலத் தெரியவில்லை.  

காண்பதற்கு அவை ஜோதிபோலவும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கவில்லை. மாறாகப் பழுக்கக் காய்ச்சிய இரும்புத்தூண்களைத் தூக்கிநிறுத்தியதுபோல ஆடாது அசையாது நின்றுகொண்டிருந்தன.  எவ்வளவு காலம் அது அப்படி இருக்கின்றது என்பதற்கு அத்தாட்சி கூற அருகில் எந்த ஜீவராசியும் உயிருடன் இல்லை.   எங்குப் பார்த்தாலும் மரங்களும் செடி கொடிகளும் காய்ந்து கருகிக் கரியாகி மண்ணில் வீழ்ந்துக்கிடக்க அங்கு வாழ்ந்த விலங்குகளின் அஸ்திகள் அதனூடே எங்கும் சிதறிக்கிடந்தது.  ஆனால் எவையும் தீயின் சுவாலை பட்டுச் சுட்டுக் கருகி இறந்ததற்கான அடையாளம் எதுவும் அங்குக் காணப்படவில்லை.  அனல் வீசியக்காற்றில் புதிதாகச் சிக்கி இறந்துபோன விலங்குகளின் எஞ்சிய அழுகிய மாமிசத்தின் துர்நாற்றம் கலந்து வனம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.  

வனத்தில் உணவுக்காகவும் நீருக்காகவும் இடம்பெயரும் விலங்குகள் இந்த நாற்றத்தையும் காற்றின் உஷ்ணத்தையும் தூரத்திலிருந்தே உணர்ந்துத் தமது வழக்கமான பாதையை மாற்றி அவ்விடத்தைச் சுற்றிக்கொண்டு செல்லத் துவங்கிப் காலங்கள் பலகழிந்துவிட்டிருந்தது.  வழித்தடங்கள் தெரியாமல் அந்த வனத்தில் வந்து சிக்கி அனலிடைப் பட்டிறந்த விலங்குகளை உண்பதற்காக ஆசைப்பட்டு புத்தி கெட்டுவந்து சிக்கிக்கொண்ட பலமுரட்டு விலங்குகள் அங்கிருந்த அனலின் வீச்சு தங்க முடியாமல் அந்த இடத்தின் எல்லையைத் தொட்டமாத்திரத்தில் சுருண்டு விழுந்து மடிந்து அழுகிக் கொண்டிருந்தன.  

எங்குமே தீயின் சுவாலைப் பட்டு எவையும் கருகியதாகவோ  இறந்ததாகத் தெரியவில்லை ஆனால் அங்கு வீசிய அனல் சிறிது நேரத்தில் எந்த ஜீவராசியையும் மடித்துவிடுமளவுக்குக் கொடுமையானதாக இருந்தது.  மரங்களெல்லாம் தங்கள் அடையாளங்களை இழக்காமல் அப்படியே கருகிக் கட்டைகளாகிச் சிதறிக் கிடந்தன நின்ற நிலையிலேயே கருகிக் கிடந்த பலமரங்களின் கிளைகளினூடே புகுந்தக் காற்று ஊழிக் காற்றைப் போல ஊளையிட்டுக் கொண்டு வீசிக் கொண்டிருந்தது.  

பலகாலங்களுக்கு முன்பே இந்த வனமானது ஒதுக்கப்பட்ட இடமென்றும் அங்கு யாரும் செல்லக்கூடாது  என்றும் அரசாங்கத்தால் அதனருகிலிருந்த ஊர்களுக்கெல்லாம் முரசறைந்து தெரிவிக்கப்பட்டது.  வனத்தினருகிலிருந்த விவசாய நிலங்களும்கூடப் பாழாகிவிட்டதால் அருகிலிருந்த கிரமங்கள்பல குடிபெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டிருந்தன.  இன்று எஞ்சி இருக்கும் சில ஊர்களில் இந்தச் சூனியப்பாறையைப் பற்றிய விஷயம் ஒரு கர்ண பரம்பரைக் கதையாகப் பேசப்படும் அளவிற்குக் காலங்கள் சென்றுவிட்டிருந்தது.

வெளியூர்களுக்குச் செல்பவர்களுக்கு மாற்றுவழிகள் அமைத்துத் தரப்பட்டிருந்தது.  பாறையைச் சுற்றிப் பல மைல்களுக்கு வெளியே வட்டவடிவச் சுற்றுப் பாதை அமைக்கப்பட்டு நான்கு திசைகளிலும் அரசாங்கக் காவலர்கள் கூடாரம் அமைத்து.   விளைந்த மூங்கில்களைக் கொண்டு சுங்க வழித் தடுப்புகளைப் போல அமைத்துக் காவலுக்காக அமர்ந்திருந்தனர்.  வழிப்போக்கர்கள் சுற்றுப் பாதையில் எப்படிச் செல்லவேண்டு மென்று அறிவுறுத்தப்பட்ட பின்னரே அவ்வழியில் அனுமதிக்கப் பட்டனர். 

அவர்களில்  யாரும் அந்தக் கருகிப்போன வனத்திற்குள் சென்றுவிடாதபடி ஆயுதம் ஏந்திய வீரர்கள் குதிரையில் வலம் வந்துகொண்டுப் பயணம் செல்பவர்களை அறிவுறுத்திச் சரியான பாதையைக் காட்டி அனுப்பிவைத்துக் கொண்டிருந்தனர்.  ஒவ்வொரு வருடமும் கருகிக்கொண்டுவரும் வனத்தின் எல்லை விரிவடைந்துக் கொண்டுவர மீண்டும் மீண்டும் அந்த சுற்றுப் பாதை புதிய எல்லைக்குத்தகுந்தபடி புதிதாக உருவாக்கப் பட்டுக்கொண்டு வருகின்றது.

சுற்றுச் சாலையின் கிழக்கு வாயிலிலிருந்து சிலகாத தொலைவில் இந்த அனல் படாத வற்றாத சிற்றருவிகள் வீழ்ந்துகொண்டிருக்கும் இடத்திற்கருகில் ஒரு சிறிய அரண்மனை கட்டப்பட்டு அதனுள் ஒரு சிவாலயமும் எழுப்பப்பட்டிருந்தது.  

கற்களும் தேர்ந்த செம்மரங்களும் தேக்கும் பொன் தகடுகளும் கொண்டு  அந்த அரண்மனை எழுப்பப்பட்டு அரசபோகத்துடன் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது.  மாளிகையின் மேல் முகட்டில் உள்ள அரைக்கோள வடிவ அலங்கார பொற்க் கூரைகளும் அதன்  மேல் பொருத்தப் பட்டிருந்த வைரங்கள் பதித்த தங்கக்கலசங்களும் சூரியஒளியில் தகதகவென்று மின்னிக்கொண்டிருந்தன.   மாளிகையினருகில் இருக்கும் குன்றின் மீது பாறையைக் குடைந்து தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது.  அதில் சில அசுரர்கள் கைகளால் சுழற்றப்படுகின்ற ராட்டினம் போன்ற எந்திரங்கள் கொண்டு தண்ணீரைஉயரே ஏற்றி பாறைமேலிருந்த கல்தொட்டிகளில் தேக்கிக் கொண்டிருந்தனர்.  

தீயில் சுடப்பட்ட செம்மண் உருளைகளை ஒன்றோடு ஒன்று பொருத்தி அந்த பொருத்தங்களில் பக்குவப்படுத்தப்பட்ட களிமண் உளுந்துமாவு கடுக்காய் சாறு சுண்ணாம்பு  சேர்ந்த கலவை பூசி உலரவைத்து நீர்த் தொட்டிகளுடன் இணைக்கப்பட்டு மாளிகையின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கல்த்தொட்டிகளில் நீர்வந்துநிரம்பிதொட்டிகளின் மேல் வழிந்து சென்றுகொண்டிருந்தது.  நீர் வழிந்தோடும் வழியெங்கும் பதிக்கப் பட்டிருந்த மல்லிகை முல்லை பாரிஜாத செடிகள் மலர்ந்து அவற்றின் மணம் மாளிகை எங்கும் பரவிக்கிடந்தது.

 தம்மைச் சுற்றிக்பணியாட்கள் குவித்துச் சென்றுவிட்டிருந்த மலர்களை ஆய்ந்து மாலைகளாகத் தொடுத்துக் கொண்டிருந்த அந்த மூன்று பெண்களும் இவைகள் எதனாலும் சந்தோசம் நிரம்பியவர்களாகத் தெரியவில்லை.  பார்வைக்கு மூவருமே தேவலட்சணமும் அரசக்கெளரவமும் பொருந்தியவர்களாகத் தெரிந்தது.   ஆனால் அவர்கள் மரவுரி தரித்து ஒரு சந்நியாசினிகள் போல மலர்க்கொய்து அதை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருக்கும் கோலத்தைப் பார்க்க அரண்மனை உள்ளே ஒரு தவச்சாலையைப் போலத்தோற்றம் கொடுத்தது. 

அக்கா தாங்கள் அங்கு என்ன நிலை என்று யாரையேனும் அனுப்பிப் பார்த்து வரச்செய்தீர்களா என விபுதை வினவச் சவுரியும் உடன் இணைந்துகொண்டு ஆமாம் அக்கா நாம் நம் சுவாமிகளுக்காக இங்கு வந்துச் சில வருடங்களே கடந்துவிட்டது.  தற்போது அவர்களின் நிலை என்னவென்றுத் தெரிந்தால் மனம் அமைதிப்படும்.   உள்ளம் சுவாமியையே நினைத்துத் தவித்துக் கொண்டுள்ளது.  நமது குலகுரு உயிருக்குப் பங்கம் விளைவிக்கும்  அளவிற்கு ஒரு தவத்தைச் சுவாமிகளை இயற்றச் செய்திருப்பது எதனாலென்று மனம் சஞ்சலம் அடைந்துகொண்டே உள்ளது.   காலங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.   மனம் நிம்மதியில்லாமல் தவிக்கின்றது அக்கா. 

மலர் மலையை எடுத்து உதறிவிட்டு அதிலிருந்த நீரும் கட்டாத பூக்களையும் உதிரச் செய்துவிட்டு தன்சிரசை உயர்த்தி விதையையும் சவுரியையும்  பார்த்தாள் சூரனின் மனைவி பதுமகோமளை.  நீங்கள் இருவரும் கவலை கொள்ளாதீர்கள் என் ஒருபாதி மனம் உங்களைப் போலவே தவித்துக் கொண்டிருக்கின்றது.  அதேசமயம் மறுபாதிமனம் நமது சுவாமிகள் மூவரின் தவமும் நிச்சயமாக நன்கு நிறைவேறும் என்று அத்தாட்சி கூறுகின்றது.  நேற்றுச் சிவாலயத்தில் பூசை முடித்துவிட்டு சிறிது நேரம் நான்கண்கள்மூடிப் பிரார்த்தனைச்செய்துகொண்டிருந்தேன் அப்போது என் மனதில் அசரீரி போன்ற ஒரு குரல் தெளிவாக ஒலித்தது.  

மகளே கவலை கொள்ளாதே உன் சுவாமியின் தவம் நிறைவேறும் உங்கள் வாழ்வு வளம் பெரும் என்று  சிவனே எனக்குக் கூறுவது போல இருந்தது.  

பின்னர் என்ன நடந்ததென்றுத் தெரியாது நீங்கள் தான் என்னைத் தண்ணீர் தெளித்து எழுப்பி மடியில் கிடத்திக் கொண்டிருந்தீர்கள்.   உங்கள் முகத்தில் பயம் தெரிந்தது.   என் மனத்தில் அப்பொழுது அனைத்துக் கலக்கங்களும் அகன்றுவிட்டிருந்தது.  

இறைவன் எனக்கு மட்டும் தெரிவித்திருந்தாலும் உங்களுக்கும் அது நம்பிக்கை தரவல்ல ஒரு செய்தியே.   அதனால் கலக்கம் கொள்வதை விட்டுவிட்டு நமது பூசையைத் தொடருவோம்.   இங்கே நாம் செய்து வரும் பூசை சுவாமிகளின் தவத்திற்குத் துணைசெய்யும்.   ஈசனின் கருணையை அவர்கள் மீதுப் பொழியவைக்கும்.  

ஆனால் இன்று அங்கு வனத்தில் நிலவும் சூழ்நிலையில் நமது சுவாமிகள் நிலை பற்றி ஏதும் சொல்வதற்கில்லை யாரும் அருகில் சென்று பார்த்து வர அஞ்சுகின்றார்கள்.   அப்படி அனுப்பிய யாரும் மீண்டு வரவில்லை.   சுவாமிகள் செய்கின்ற கடுந்தவம் அவர்களது உடலையும் கூடப் பொசுக்கிக் கொண்டிருக்கின்றது.  எந்த ஜீவராசிகளும் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக அந்த வனம் ஆகிவிட்டது என்பது நீங்களும் அறிந்ததே.   மக்களும் அந்த இடத்தை சூனியவனம் மாயவனம் என்று பெயர்கொண்டு அழைக்க ஆரம்பித்து பலகதைகளையும் கூற ஆரம்பித்துவிட்டார்கள்.  

 நான் நமதுக் குலதெய்வம் மாயாதேவியின் துணைக்கொண்டு பிரசன்னங்கள் பார்த்து சில உண்மைகளைத் தெரிந்துகொண்டேன்.  பிரசன்னத்தின்போது மாயா அன்னை கூறினார்கள் சுவாமிகளின்  உயிருக்கு எந்த பாதகமும் நேராது கவலைக்கொள்ள வேண்டாமென்று.   அதனால்தான் இப்பொழுதுச் சிறிது மன அமைதி கொண்டிருக்கின்றேன் நீங்களும் கவலையையொழித்து நிம்மதி கொள்ளுங்கள். 

அக்கா நம்மிடம் உள்ள சம்பத்துகளுக்கும் பொன் பொருட்களுக்கும் இந்த உலகமே இணையில்லையே பின் ஏன் சுவாமிகள் சுகங்களைத் துறந்து இன்று இந்தத் தவம் மேற்கொள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது.  

விபுதை அசுரக் குலத்தில் பராக்கிரமம் நிறைந்த நம்முடைய முன்னோர்கள் பலரும் கடுமையான தவம் செய்தே மிகுந்த பெருமை தரக்கூடிய வரங்களைப் பெற்று பின்னர் மூவுலகையும் ஆட்சிசெய்து வந்திருக்கின்றார்கள்.   அவர்கள் வரிசையில் நமது சுவாமிகளும் குலப்பெருமை சேர்க்கும் விதமாகவே இன்று இந்த தவத்தை மேற்கொண்டுள்ளனர்.  

சகோதரிகளே உங்களைப் போல என் மனமும் தவித்துக் கொண்டிருந்தாலும் அரசாங்கக் காரியங்கள் தடையின்றி நடக்க நான் மனதைத் திடமாக்கி வைத்திருக்கின்றேன்.   மகேந்திரபுரியில் நமது தந்தைக்கு நிகரான நமது சுவாமிகளின் தந்தையார் கசியபர் இருந்து அனைத்து அரசாங்க அலுவல்களையும் பார்த்துக் கொள்கின்றார்.

இங்கே நமது சுவாமிகளின் தவத்திற்குப் பங்கமேதும் வந்துவிடாதவாறு நான்குபுறமும் பலம் வாய்ந்த சேனாதிபதிகளுடன் பல்லாயிரம் சேனைகளை நிறுத்தி எந்தவித எதிர்ப்புகளுக்கும் போருக்கும் ஆயத்தமாக அவர்களைப் பகலும் இரவும் கண்காணிப்புடன் இருந்துவரக் கட்டளையிட்டிருக்கின்றேன்.  மேலும் முண்ட தேசத்திலிருந்து முசுண்டன் என்னும் மாயாவி அரக்கனை வரவழைக்க இங்கிருந்து தூதுவர்கள்சென்றிருகின்றார்கள்.  சிலதினங்களில் அவனிங்கு வந்துவிடுவான்.   அவன் மாயசக்திகளை பயின்றவன் அதனால் அவன் நமது சுவாமிகளின் அருகில் சென்று அவர்களது நலம் பற்றி தகவல்களைத் தெரிந்து வருவான் என்று நம்புகின்றேன் என்று கூறிப் பதுமகோமளை அனைத்து மாலைகளையும் பணிப்பெண்களிடம் ஆலயத்திற்கு எடுத்துவரச் சொல்லிவிட்டு விதையையும் சவுரியையும் அழைத்துக் கொண்டு அன்றைய பூசைக்கு ஆலயம் நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.

சூனிய வனத்தில் சூரன் சிங்கமுகன் தாரகன் மூவரும் செய்யும் தவத்தால் எழுந்த கனல் அந்த வனத்தைப் பொக்சுகியது மட்டுமன்றி விண்ணில் எழுந்து மேலே சூனியம் போன்ற ஒரு வெட்டவெளியை ஏற்படுத்தி விட்டிருந்தது.  மேகங்களும்கூட அந்த வெளியைக் கடக்க அஞ்சி அதைச் சுற்றிக்கொண்டு சென்றன.   இதையறியாது அந்த வெட்டவெளியைக் கடக்க முயற்சி செய்யும் பறவைகளெல்லாம் துணுக்குற்று க்ஷணத்தில் உயிர்துறந்து கீழே விழுந்து இறந்துகொண்டிருந்தன.  

தவத்தின் ஆற்றல் ஓங்க ஓங்க அனலின் வீச்சும் அதிகரித்து விண்ணின் பல அடுக்குகளையும் ஊடுருவிச் சென்று தேவருலகைச் சூழ்ந்துகொண்டது.  தேவருலகைச் சூழ்ந்த இந்த அனல்காற்றால் பூமியில் செய்த யாகங்களின் ஆவிர்பாகங்கள் தேவர்களைச் சென்றுசேர முடியாமல் பலனிழந்து விண்ணில் கரைந்து போய்க்கொண்டிருந்தது.  தேவர்கள் தமக்குக் கிடைக்கவேண்டிய ஆவிர்பாகம் கிடைக்காததால் பலமிழந்து முகம் வாடி நிலைகுலைந்து நின்றார்கள்.

 இந்தச்சூழ்நிலை எதனால் நேர்ந்தது என்று தேவகுரு பிரகச்பதியுடன் இந்திரன் மந்திராலோசனையில் அமர்ந்திருந்தான்.  இந்திராதிபதி தன் குருவைப் பார்த்து.  குருவே நான் சில வாரங்களுக்கு முன் அவ்விடத்தைச் சென்று பர்வையிட்டுவந்தேன். 

காணச்சகிக்காத தோற்றத்துடன் அந்த வனமெல்லாம் கருகி வீழ்ந்து கிடக்கின்றது.  அசுரர்கள் மூவரும் இப்பொழுதோ அப்பொழுதோ வென்று உடல் மெலிந்துச் சதையும் தோலும் எலும்போடு ஒட்டிக்கொள்ள உயிர் ஒடுங்கி வெந்த செங்கற்களைப் போலச் சமைந்துவிட்டனர்.  ஐயனே அங்கு ஒலித்துக் கொண்டிருக்கின்ற ஊழிக் காற்றினிடையே அவர்கள் உயிரிலிருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்ற சிவநாமம் மட்டுமே அங்கு ஜீவனாகப் பரவிக் கிடக்கின்றது.

தேவலோகத்திற்குச் சங்கடங்கள் வருவதைத் தவிர்க்க அந்த சூனிய வனத்தின் மேல் நான் எனது வஜ்ராயுதத்தைக்கொண்டு ஒரு தடுப்பரணை எழுப்பி நமது லோகத்தை அதன் சுவாலைகள் வந்து தாக்காதவாறுச் செய்துவிட்டுவந்தேன்.  ஆனால் பலனேதுமில்லை  எழுதினங்களிலேயே நான் எழுப்பிய தடுப்பரண்   கரைந்து போயிற்று.  இன்னும் சில நாட்களே அசுரர்கள் ஜீவித்திருப்பார்கள்  என்று என் ஆழ்மனம் கூறுகின்றது.  அசுரர்கள் எழுப்பிய தவக்கனலில் அவர்களே விழுந்து மடிந்தவுடன் இந்திரலோகத்தின் இந்தத் தற்காலிக நிலைச் சீராகிவிடும் என்று மகிழ்ச்சிப்பொங்கக் கூறிவிட்டு தன் குரு பிரகஸ்பதியைப் பார்த்தான் இந்திரன். 

பொன்னிறப் புன்னகையொன்றை உதிர்த்த தேவகுரு.  இந்திரதேவா அப்படி எதுவும் குறைவாக எடைபோடாதே தவத்தின் போக்கை.  நீ உனது முந்தைய தவறுகளிலிருந்து பாடங்கள் ஏதும் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை.   தேவலோகத்திற்கு ஏற்பட்ட சங்கடங்களைத் தவிர்க்கப் பலமுறை நீ மகாதேவரைத் தொழுது அவரது அருள்பெற்றபின்னரே மீண்டும் இங்கே வந்து ஆட்சிசெய்ய முடிந்தது என்பதை நீ மறந்துவிட்டாய்ப் போலும். 

எனக்கென்னவோ இந்த சூழ்நிலை இன்னும் மோசமடையும் என்றே சகுனங்கள் கூறுகின்றன.  நான் இங்கு வருவதற்கு முன்பு எனது வாகனத்தில் பழுது ஏற்பட்டு பயணம் தடைப்பட்டது.  தேவதச்சனை அழைத்து அதைச் சரிசெய்து இங்குவரத் தாமதமாகிவிட்டது.  தேவலோகமெல்லாம் இருள் சூழ்ந்திருப்பதுபோன்ற ஒரு காட்சி என் கண்களுக்கு வந்து சென்றது. வானத்தில் மழைமேகங்கள் தண்ணீருக்குப் பதிலாக ரத்தத்தைப் பொழிந்துகொண்டிருப்பது போன்றக் காட்சிகள் வந்துச்சென்று என் மனதைச் சஞ்சலம் அடையச்செய்தது.

இவற்றுக்கிடையே நீ எப்பொழுதும் போல உன் சந்தோசமான நினைவுகளுடன் வலம் வந்துகொண்டிருக்கின்றாய்.   உன் புத்தியைத் தீட்டிக்கொள்.   ஏனெனில் இதுவரை மாகாதேவர் தவம் செய்தவர்களுக்கு அதற்குரிய பலனைக் கொடுக்காமல்  நிராகரித்ததில்லை.   தவத்தின் பெருமை அத்தகையது.   அதனாலேயே  நம்பிக்கையோடு அசுரர்கள் சுக்கிராசாரியாரின் அறிவுரைப்படி இந்த தவத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள்.   நீ நினைப்பதுபோல மகாதேவர் அவர்களைக் கைவிட்டுவிடுவார் என்று என்னால் சிந்திக்கவும் இயலவில்லை.

இன்று உங்களுக்கு தேவலோகத்தைச் சூழ்ந்துள்ள அனல்காற்றால் பூமியிலிருந்து உங்களுக்குக் கிடைக்கவேண்டிய அவிர்ப்பாகங்களும் வாழ்த்தொலிகளும் உங்களை வந்து சேராமல்  தடைப்பட்டு நின்றுவிட்டன.   அமிர்தத்தின் துணையால் உங்களால் தொடர்ந்து உயிரைத் தக்கவைத்துக் கொண்டு வாழமுடிந்தாலும் உங்களால் பலகாலம்  சந்தோசமாக அனைத்துச் சுகங்களையும் அனுபவித்துத் திரியமுடியாது. 

நீங்கள் அனைவரும் போருக்குத் தயாராக வேண்டிய நிர்ப்பந்தம் உங்களை நெருங்கிக்கொண்டுவருகின்றதென்றே எனக்குத் தோன்றுகின்றது.   அதனால் உனது ஆயுதங்களைத் தீட்டிக்கொள் படைகளைத் தயார்செய்து பலப்படுத்திக்கொள்.  ஒருவேளை இங்கு யாரும் வாழமுடியாது என்னும் சூழ்நிலை வந்துவிட்டால்,  அருகில் இருக்கும் உலகங்களிலோ பூலோகத்திற்கோ  சென்று அவைகளில் தற்காலிகமாக மறைந்து வாழ்ந்துகொள்ளுங்கள்.  இதனால் உங்கள் சுகபோகங்களுக்குச் சிலகாலங்கள் குறைவு ஏற்படுமென்றாலும் உங்கள் உயிர்கள் பாதுகாக்கப்படும்.  

 இந்திரனுக்கு குருவின் ஆருடம் சற்றும் பிடிக்கவில்லையென்றாலும் தனது குருவின் வார்த்தைகளை மதிப்பதுபோல பாவனை செய்து கொண்டான்.  மற்றவர்களின் முன் தைரியம் கொண்டவன் போல வெளியில் நடித்தாலும், அவனுள் ஒரு நடுக்கம் இருந்துகொண்டிருந்தது நாம் வஜ்ராயுதத்தால் எழுப்பிய தடுப்பரண் இன்று கரைந்து போய்விட்டது.  இனி வேறு எந்த பலம்வாய்ந்த ஆயுதம் இதைச்சீர்செய்து நமக்கு நன்மைச் சேர்க்கப் போகின்றது என்று மனம் குழம்பிக்கொண்டிருந்தது.   நாராயணரின் சக்கரமும் மகாதேவரின் சூலமும் பாசுபதாச்திரமும் இருக்கும் வரை நமக்குக் கவலையில்லை என்று மனம் ஓரளவிற்கு ஆசுவாசமடைந்தது.

தனது குரு சொல்வதிலுள்ள உண்மைகளை மனம் சிந்திக்கச்சிந்திக்க நடுக்கம் வந்தாலும் வேறு வழியில்லை என்றே அவனுக்குத் தோன்றியது.                   நல்லது குருவே நீங்கள் கூறியபடி நான் தேவலோகப் பிரதிநிதிகளிடம் இதைப் பற்றிக் கலந்தாலோசித்து மீண்டும் உங்களுக்கு மந்திராலோசனைக்கான அழைப்பை அனுப்புகின்றேன் என்று கூறி பிரகஸ்பதிக்கு விடைகொடுத்தான்.

பொன்னிறத்தில் விரிந்ததத்தாமரைமலரைப் போல இருந்த அந்த வாகனத்தின் வரை குருவினுடன்வந்து இந்திரன் பிரகஸ்பதியை வழியனுப்பி வைத்தான்.   பிரகஸ்பதி  வாகனத்தில் அமர்ந்தவுடன் வாகனத்தில் மலர்ந்திருந்த வடிவில் தங்கம்போல் ஒளிர்ந்த தாமரை இதழ் வடிவத் தகடுகள் அனைத்தும் தானே மூடிக்கொண்டன.   கோளவடிவம் கொண்ட அந்த ஊர்தி கண்ணிமைக்கும் நேரத்தில் வானில் எழுந்து வியாழன்கோளினை நோக்கிச் சென்று மறைந்தது.
சூனியவனத்தில் எவ்வித மாற்றமும் தெரியவில்லை.  தேவேந்திரனால் அனுப்பப்பட்ட சில ஒற்றர்கள் வானில் அனல் படாத இடமாகப் பார்த்து சாகை அமைத்துக் கொண்டு நடப்பவற்றை ஆராய்ந்து இந்திரனுக்கு மனத்தொடர்புமூலம் செய்திகளைப் பரிமாறிக்கொண்டிருந்தனர்.  வழக்கம் போலச் சூரியன் காய்ந்துகொண்டு தனது பங்குக்கு வனத்தில்  அனலுக்கு அனலூட்டிக் கொண்டிருந்தது.
######கந்தபுராணம்(கதை) ### பகுதி  1 ###         தொடரும்......
----------------------------புத்தகம் கிடைக்கும் இடம் -----------------

வாசகர் பக்கம்

கந்தன்கதை புத்தகம்   910 பக்கங்கள் மற்றும் இதன் அட்டையிலிருப்பது போன்ற அரிதான போர்க்களக்காட்சிகளின் வண்ணப் படங்களுடன் இந்த kindle பதிப்பு வ...